ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
சென்னை சென்ட்ரல் கோபுரக் கட்டடத்திற்கு முதல்வர் அடிக்கல்!
சென்னை சென்ட்ரல் பகுதியில் அமையவுள்ள சென்னை சென்ட்ரல் கோபுரக் கட்டடத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
4 அடித்தளங்களில் 8 நிலையில் 586 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 1652 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் கட்டப்படவுள்ளது. 14,280 சதுர மீட்டர் பரப்பளவில் 546.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது.
சென்ட்ரல் கோபுர கட்டடம் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் முதல் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. கட்டட அமைப்பு 4 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 27 அடுக்குமாடிகளுடன் 120 மீ உயரத்தில் அமைக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க: செர்னோபிள் அணு உலை கதிர்வீச்சுத் தடுப்புக் கட்டமைப்பு மீது ரஷியா தாக்குதல்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் அமையவுள்ள இந்த 27 மாடிக் கட்டடம் தொடர்புகள், தற்போதைய வசதிகள் மற்றும் நிலையான பராமரிப்பு முறைகள் அனைத்தையும் இணைக்கும் வகையில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், “சென்னை சென்ட்ரல் கோபுரம் ஒரு முக்கியமான செயல்பாட்டு மையமாக கருதப்படுகிறது.