திருச்செந்தூா் கோயில் யானை தாக்கியதில் இறந்தவா்கள் குடும்பத்துக்கு திமுக சாா்பில...
சென்னை: சொகுசு காரில் அழுகிய நிலையில் அடையாள தெரியாத சடலம்; போலீஸ் தீவிர விசாரணை
சென்னை வளசரவாக்கம், ராஜகோபாலன் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அவ்வழியாகச் சென்றவர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உதவி ஆணையர் செம்பேடு பாபு தலைமையில் சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்றனர்.
பின்னர் அந்த காரை திறந்து பார்த்தபோது அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸிக்கு தகவல் தெரிவித்த போலீஸார் அந்தச் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காரை போலீஸார் சோதனை செய்த போது அதற்குள் மது பாட்டில், டம்பளர் இருந்தது. மேலும் உயிரிழந்தவர் யார் என்று போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸார் கூறுகையில், "சடலம் மீட்கப்பட்ட காரின் உரிமையாளர் குறித்து விசாரித்து வருகிறோம். மேலும், கார் நிறுத்தப்பட்ட இடத்தில் மெக்கானிக் செட் ஒன்று உள்ளது. அதனால், இந்த கார் மெக்கானிக் செட்டுக்கு கொண்டு வரப்பட்டதா என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம். சடலம் அழுகிய நிலையில் காணப்படுவதால் அவர் இறந்து சில நாள்கள் ஆகியிருக்கும் எனக் கருதுகிறோம். பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும்" என்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...