மகா கும்பமேளா: முதல் 6 நாளில் 7 கோடி பக்தா்கள் புனித நீராடல்
சென்னை திரும்புவோருக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: முழு விவரம்!
பொங்கல் தொடர் விடுமுறைக் கால கூட்ட நெரிசலைத் தவிர்க்க, தென் மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்புவோருக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மண்டபத்தில் இருந்து வருகிற ஜன. 19 ஆம் தேதி இரவு 10 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில்(06048) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மண்டபம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சீர்காழி, விழுப்புரம், திண்டிவனம் வழியாக இயக்கப்படுகிறது.
தூத்துக்குடி தாம்பரம் சிறப்பு ரயிலானது தூத்துக்குடியில் இருந்து வருகிற ஜன. 19 ஆம் தேதி பகல் 4.25 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் கோவில்பட்டு, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம் வழியாக இயக்கப்படுகிறது.
மதுரையிலிருந்து சென்னைக்கு ஜன. 19-ல் முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு ரயில் இயக்கப்பட உள்ளது.
எழும்பூா்- மதுரை மெமு ரயில் (06061) வருகிற 18-ஆம் தேதி காலை 10.45 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, இரவு 7.15 மணிக்கு மதுரையை வந்து சேரும்.
மறு வழித்தடத்தில் மதுரை-சென்னை முன்பதிவில்லா மெமு ரயில் (06062) வருகிற 19-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு, நள்ளிரவு 12.45 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும்.
இந்த ரயில்கள் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.