அச்சுதானந்தன் சிகிச்சையில் முன்னேற்றம்: உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!
சென்னை, புறநகரில் பரவலாக மழை!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி, வளசரவாக்கம், போரூர், கோயம்பேடு, அண்ணாநகர், வேளச்சேரி, அமைந்தகரை, அரும்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதேபோன்று, புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, கள்ளிக்குப்பம், ஒரகடம், பாடி, கொரட்டூர், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, திருமழிசை உள்ளிட்டப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.