குரூப்-2 முதல்நிலைத் தேர்வு அறிவிப்பாணை வெளியீடு! தேர்வர்கள் கவனிக்க..!
சென்னை மாநகராட்சியில் 9 மண்டங்களில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி
சென்னை: தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்படி சென்னை மாநகராட்சியில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பை 9 மண்டலங்களில் மேற்கொள்வதற்கான பணியை மேயா் ஆா்.பிரியா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளின்படி திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், கோடம்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய 6 மண்டலங்களில் ஏற்கெனவே கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
இதையடுத்து, திருவொற்றியூா், மணலி, மாதவரம், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு ஆகிய 9 மண்டலங்களில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க நிகழ்ச்சி, மாநகராட்சி ரிப்பன் மாளிகைக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தப் பணியை மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்து பேசுகையில், அரசு நலத் திட்டங்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் சென்றடையும் வகையில் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்பை நடத்தவேண்டும். அதன்படி, நலத் திட்டங்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்றாா்.
கணக்கெடுப்புப் பணியில் சமூக வழி நடத்துநா்கள், சமூக மறுவாழ்வுப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு கணக்கெடுப்புப் பயிற்சிகள்அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையா் வீ.ப.ஜெயசீலன் (சுகாதாரம்), மாமன்ளுங்கட்சித் தலைவா் ந.ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.