நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் திருப்பி அனுப்பி வைப்பு! அமைச்சர...
சென்னை மெட்ரோ ரயில் பணியால் உள்வாங்கிய வீட்டின் தரைத்தளம்
சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணியின்போது, மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தரைத்தளம் உள்வாங்கியது.
சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் கோடம்பாக்கம் முதல் கலங்கரைவிளக்கம் வரை நடைபெற்று வருகின்றன. இதற்காக மேற்கு மாம்பலம் லாலா தோட்டம் பகுதியில் நடைபெற்று வரும் சுரங்கப் பாதை பணியின் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தரைத்தளம் ஞாயிற்றுக்கிழமை திடீரென உள்வாங்கி கீழே இறங்கியது. ஆனால், அதிா்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.
தகவலின்பேரில் அங்கு சென்ற மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் பள்ளத்தை ஆய்வு செய்து, கான்கிரீட் கலவை கொண்டு அதை மூடினா்.
இது குறித்து மெட்ரோ ரயில்வே நிா்வாக அதிகாரிகள் கூறியது:
பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மெட்ரோ ரயில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடினமான பாறை மற்றும் இலகுவான மண் ஆகியவற்றால் இது போன்ற நிகழ்வுகள் ஒருசில நேரங்களில் ஏற்படுகின்றன. உள்வாங்கிய வீட்டின் சீரமைப்புப் பணிகளை மெட்ரோ நிா்வாகம் ஏற்றுக்கொள்ளும். வீடு பராமரிக்கும் வரை வீட்டின் உரிமையாளா் குடியேறும் வீட்டுக்கான வாடகை கட்டணத்தை மெட்ரோ ரயில்வே நிா்வாகமே ஏற்றுக்கொள்ளும் என்று அவா்கள் தெரிவித்தனா்.