செய்திகள் :

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் கவனத்திற்கு; `QR code' டிக்கெட் சேவை பாதிப்பு; CMRL அறிவுரை

post image

சென்னையின் மக்கள் தொகை காரணமாக போக்குவரத்து நெரிசல் பெரிதாக இருந்து வந்தது. இந்தப் பிரச்னைக்கு சின்ன ஆசுவாசத்தை கொடுத்திருக்கின்றன மெட்ரோ ரயில்கள். 

சென்னை மெட்ரோ ரயிலில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் அலுவலகங்களுக்கு, முக்கியப் பணியங்களுக்காக பயணம் செய்து வருகின்றனர்.

இதில் QR code அத்தனை பயணிகளுக்கும் பயன்படுத்துவது இப்போதைய மெட்ரோ தொழில்நுட்பத்திற்கு இயலாத காரியம்.

இதனால் சமீபத்தில் மெட்ரோ ரயிலில் பயணிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக தேசிய பொது போக்குவரத்து அட்டையை (சிங்கார சென்னை அட்டை) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

க்யூஆர் சேவை மூலம் டிக்கெட் எடுக்கவும் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. இதன்மூலம் 'QR code' டிக்கெட்களை பெரும் நெரிசலை தவிர்க்கலாம்.

Chennai Metro Rail | சென்னை மெட்ரோ ரயில்

இந்நிலையில் இன்று காலை முதல் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள், க்யூஆர் சேவை மூலம் டிக்கெட் எடுக்க முடியாமல்  சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ க்யூஆர் ஆன்லைன் டிக்கெட் சேவைகள் தற்காலிகமாக செயல்படவில்லை என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்த CMRL அறிவிப்பில், "தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, STATIC QR ஆன்லைன் டிக்கெட் சேவை தற்காலிகமாக வேலை செய்யவில்லை.

எனவே பயணிகள் CMRL மொபைல் செயலி, Whatsapp டிக்கெட்டிங், Paytm, phonepe, Singara Chennai Card, CMRL பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தகவல் வரும் வரை பயணிகள் கவுண்டரிலும் டிக்கெட்டுகளைப் பெறலாம்." என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Modi: "இந்தியாவின் மிகப்பெரிய எதிரி இதுதான்;எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு..!" - பிரதமர் மோடி

குஜராத்தின் பாவ் நகரில் ரூ.34,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.இதையடுத்து இந்தியாவின் வளர்ச்சிக் குறித்துப் பேசிய மோடி, இந்தியாவின் எதிரி மற்ற நாடுகளைச் சார்... மேலும் பார்க்க

``எல்லாவற்றையும் கூகுள், AI பார்த்துக்கொள்ளும் என்று மெத்தனமாக இருக்க வேண்டாம்'' - ஸ்டாலின் அறிவுரை

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோ... மேலும் பார்க்க

Army: லடாக் பனிமலை அதிகாரி டு வெலிங்டன் ராணுவ கல்லூரி கமாண்டென்ட்; யார் இந்த மணீஸ்யெரி?

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ராணுவ பயிற்சி மையம் இயங்கி வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது 'மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர்' என்ற பெயரில் தொடங்கப்பட... மேலும் பார்க்க

``பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறக் காரணம் இதுதான்; டிசம்பரில் நல்ல செய்தி'' - டிடிவி தினகரன்

மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து விலகுவதாக வெளிப்படையாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து பாஜக தலைமையிலான... மேலும் பார்க்க

TVK: விஜய் வீட்டின் மாடியில் புகுந்த இளைஞர்; பலத்த பாதுகாப்பை மீறி சென்றது எப்படி? -போலீசார் விசாரணை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் நீலாங்கரை வீட்டில் மொட்டை மாடியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் இருந்துள்ளார். பலத்த பாதுகாப்பையும் மீறி, மாடியில் இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்ததைப் பார்த்து விஜ... மேலும் பார்க்க

பழனி: பழங்குடி மக்களின் துயரத்தை எடுத்துரைத்த ஜூ.வி... வீடு கட்டும் ஆணை பிறப்பித்த அரசு நிர்வாகம்!

பழனியில் உள்ள மண் திட்டில் பகுதியில் வசிப்பதற்கு வீடில்லாமல் கிழிந்த தார்பாய்களால் பெரும் சிரமத்துடன் வசிப்பதாக ஜுனியர் விகடன் இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த செய்திக்காக மாவட்ட ஆட்சியர் சரவண... மேலும் பார்க்க