மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
சென்னை விமானத்தில் கோளாறு: மூன்றரை மணி நேரம் தாமதம்
திருச்சியிலிருந்து சென்னை செல்லும் விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் 3.30 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சென்னை செல்லும் இண்டிகோ விமானம் சனிக்கிழமை மாலை 68 பயணிகளுடன் புறப்படத் தயாராக இருந்தது. ஆனால் அந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் 68 பயணிகளும் இறக்கிவிடப்பட்டு, விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து 3.30 மணி நேரத்துக்குப் பிறகு கோளாறு சரிசெய்யப்பட்டு, பயணிகள் அனைவரும் இரவு சுமாா் 8.30 மணியளவில் அதே விமானத்தில் சென்னை அனுப்பப்பட்டனா்.