செய்திகள் :

சென்னை: 25,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்ற கடலோர தூய்மைப் பணிகள்!

post image

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு, இன்று காலை 7 மணிக்கு ‘கம்யூனிட்ரீ’ (Communitree) என்ற அமைப்பு சென்னையில் ஒருங்கிணைத்த கடற்கரை தூய்மைப் பணி, காசிமேடு முதல் கோவளம் வரை பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுக்கொண்ட உற்சாகமான நிகழ்ச்சி நடைபெற்றது.

‘கம்யூனிட்ரீ’ என்னும் அரசு சாரா நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக கடற்கரை தூய்மைப் பணிகளைச் செய்து வந்ததாகவும், இந்த வருடம் சென்னையில் 25,000-க்கும் மேற்பட்டோர் இந்தப் பணியில் கலந்துகொண்டதாகவும் அதன் நிறுவனர் ஹாபிஸ் கான் தெரிவிக்கிறார்.

மெரினா கடற்கரையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி நிறுவன ஊழியர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்கள் தன்னார்வலர்களாகப் பங்கேற்றுக் கொண்ட தூய்மைப் பணி உற்சாகமாக நடைபெற்றது.

இதற்கு ஒளியேற்றும் விதமாக, தமிழ்நாடு முதன்மை வனப் பாதுகாவலர் ஸ்ரீனிவாச ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

தூய்மைப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கைஉறைகள், குப்பைப் பைகள் போன்ற உபகரணங்களோடு, புத்துணர்வு அளிக்கும் டீ, ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீர் வைக்கப்பட்டிருந்தது. கூடுதலாக, மக்களின் பாதுகாப்புக்காக அவசர ஊர்திகள் மற்றும் முதலுதவிக் கருவிகளும் தயார் நிலையில் இருந்தன.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ஒருங்கிணைப்பாளர் ஹாபிஸ் கான், இது முழுக்க முழுக்க ஒரு மக்கள் இயக்கம் என்றும், அரசு சார்பில் எல்லா அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், கடந்த ஆண்டு 200 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு குறைந்தது 250 டன் குப்பைகள் சேகரிக்கப்படும் என்றும், அடுத்த கட்டமாக சேகரிக்கப்பட்டவை பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

- கோகுல் சரண்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``4 ஆண்டுகள் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை'' - உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்த மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவிற்கு உள்பட்டது கீரமங்கலம் கிராமம்.இந்த கிராமத்தில், 45 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தண்ணீர்த் தொட்டி, கொத்தமங்கலம்–கீரமங்கலம் முதன்மைச் சாலை ஓரத்தில் கிராம மக்களுக்கா... மேலும் பார்க்க

``விஜய் இப்போது தானே முதல் சுற்று வந்துள்ளார், அடுத்த சுற்றில் பார்ப்போம்'' - அமைச்சர் KKSSR

விருதுநகரில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக முதல்வர் முன்னெடுத்துள்ள ஓரணியில் தமிழ்நாடு என்ற தி.மு.க-வின் முன்னெடுப்பில் 1 கோடி குடு... மேலும் பார்க்க

Charlie Kirk கொலை: அரை கம்பத்தில் அமெரிக்க கொடி; எதிர்கட்சியினர் சொல்வது என்ன?

அமெரிக்காவின் உதா பல்கலைக்கழகத்தில் அதிபர் ட்ரம்ப்பின் கூட்டாளியான சார்லி கிர்க் சுட்டுக்கொல்லப்பட்டார். Charlie Kirk மற்றும் Turning Point USAசார்லி கிர்க் ஒரு வலதுசாரி பழமைவாத செயற்பாட்டாளர் ஆவார். ... மேலும் பார்க்க

பாமக: ``நம் பிரதமர் மோடிகூட என்னை சந்தித்தால் கட்டி அணைத்துக்கொள்வார்'' - ராமதாஸ் சொல்வதென்ன?

பா.ம.க-வில் கடந்த சில மாதங்களாகவே தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்குமிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு தரப்புமே தாங்கள்தான் கட்சித் தலைவர் எனச் சொல்லி வருகின்றன. இதனால் அங்கு பல்வேறு குழப்பங்க... மேலும் பார்க்க

VP Election: `15 ஓட்டு; கணித ரீதியான வெற்றி; எதிர்க்கட்சிகள் கூட்டணி பலப்பட்டிருக்கிறது' – காங்கிரஸ்

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே ஜக்தீப் தன்கர் குடியரசுத் துணைத் தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.இதனால், மாநி... மேலும் பார்க்க

Exclusive: ``வைகோ 100 முறை தாயகத்தில் சத்தியம் செய்தார்; காப்பாற்றவில்லை'' - மல்லை சத்யா சொல்வதென்ன?

ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கும் சில காலமாகவே கருத்து மோதல் நிலவி வந்தது. இதற்கிடையில், மல்லை சத்யா கட்சியிலிரு... மேலும் பார்க்க