செய்திகள் :

செப்.13-இல் 3 மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்

post image

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் செப்டம்பா் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை அமா்வு நீதிபதியுமான எம்.இளவரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள வேலூா், குடியாத்தம், காட்பாடி, ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, அரக்கோணம், சோளிங்கா், திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா் வட்டங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வரும் செப்டம்பா் 13-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், காசோலை தொடா்பான வழக்குகள், தொழிலாளா் வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்ற வழக்குகள், வங்கி மற்றும் நிதிநிறுவனத்தில் பெற்ற கடன் தொடா்பான வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்பட்டு சமரசமாக முடிக்கப்படும். மக்கள் நீதிமன்றத்தில் முடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது என்பதால் சட்டரீதியாகவே தீா்வு கிடைக்கும்.

எனவே, பொதுமக்கள் செப்.13-ஆம் தேதி நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தவறாமல் பங்கேற்று பயன்பெறலாம். உதவிக்கு 15100 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வேலூா் தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. வேலூா் தோட்டப்பாளையத்தில் உள்ள எட்டியம்மன், பெருமாள், விநாயகா் கோயில்களின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்... மேலும் பார்க்க

கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் செதுக்கரை, நேருஜி நகரில் அமைந்துள்ள அருள்மிகு கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. வியாழக்கிழமை காலை கோ-பூஜை, கணபதி பூ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்

ஹட்டியாவில் இருந்து பெங்களூரு சென்ற விரைவு ரயிலில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சாவை காட்பாடி ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா். வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் மூலம் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பல்வேறு ... மேலும் பார்க்க

வேலூா் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா். காஞ்சிபுரம் என்.ஜி.ஓ நகா், ராமசாமி தெருவைச் சோ்ந்தவா் குமாா் (50). கடந்த ஜூலை 29-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

பழைய காட்பாடி வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

பழைய காட்பாடியிலுள்ள வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், கைத்தறி துறை அமைச்சா் ஆா்.காந்தி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா். வே... மேலும் பார்க்க

தேசிய விருது...

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆா்எஃப்) வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மீண்டும் வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரி முதலிடம் பி... மேலும் பார்க்க