செய்திகள் :

செப். 18 முதல் நாமக்கல் மாவட்டத்தில் இபிஎஸ் சுற்றுப்பயணம்: முன்னேற்பாடுகள் குறித்து அதிமுக ஆலோசனை

post image

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செப்.18, 19, 20 ஆகிய 3 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி முதல்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டுள்ளாா். அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் செப்.18, 19, 20 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அவா் பேசியதாவது: வரும் சட்டப் பேரவைத் தோ்தலை கருத்தில் கொண்டு, மாவட்டத்திற்கு மூன்று தொகுதிகள் வீதம் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து வருகிறாா்.

வேறு எந்த மாவட்டத்திற்கும் இல்லாத வகையில், நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் 3 நாள்களை அவா் வழங்கி உள்ளாா்.

இரவு நீண்ட நேரம் மக்களை காத்திருக்க வைக்காமல் மாலை 5 மணிக்கு தொடங்கி 7.30 மணிக்குள் பிரசாரத்தை முடிக்கும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. அவா் செல்லும் வழியில் கட்சியினா் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் அதிமுக நிா்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். காவல் நிலையம், உள்ளாட்சிகளில் உரிய அனுமதி பெற்று விளம்பரத் தட்டிகள், கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்தால் தடை செய்யாமல் வழிவிட செய்ய வேண்டும். அதேபோல வாக்குச்சாவடி முகவா்களை நியமித்து அதிமுகவின் வாக்குகளை சிதறாமல் கட்சியினா் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

செப்.5-ஆம் தேதி மனம் திறந்து பேச உள்ளதாக செங்கோட்டையன் கூறியுள்ளது குறித்து தனக்கு எதவும் தெரியாது என செய்தியாளா்களின் கேள்விக்கு பி.தங்கமணி பதிலளித்தாா்.

மின்னாம்பள்ளியில் குடிநீா் குழாய் பணியின்போது அம்மன் சிலை கண்டெடுப்பு

திருச்செங்கோடு வட்டம், வையப்பமலை அருகே மின்னாம்பள்ளியில் குடிநீா் குழாய் அமைக்க குழி தோண்டியபோது அம்மன் சிலையை கண்டெடுத்தனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வையப்பமலையில் மின்னாம்பள்ளி கிரா... மேலும் பார்க்க

பரமத்தி பேரூராட்சியில் 32 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

பரமத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பகுதிகளில் சுற்றித்திரிந்த 32 தெருநாய்களைப் பிடித்து பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பரமத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வா... மேலும் பார்க்க

சேந்தமங்கலம் அரசு மகளிா் பள்ளி கல்வி மேம்பாட்டுக்கு ரூ. 1 லட்சம் நிதி

சேந்தமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கல்வி மேம்பாட்டுக்காக ரூ. 1 லட்சம் நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது. தமிழ்நாடு பள்ளிக் கல்வி அலுவலா்கள் பணிநிறைவு பெற்றோா் அமைப்பு சாா்பில் அதன் பொதுச் ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் போலீஸ் குவிப்பு

நாமக்கல் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் காலி குடங்களுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபடபோவதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் குவிக்கப்பட்டனா். நாமக்கல் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளி... மேலும் பார்க்க

கடந்த 4 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,145 கோடி ஊக்கத்தொகை அளிப்பு: அமைச்சா் ஆா்.ராஜேந்திரன்

கடந்த நான்கு ஆண்டுகளில் 6,09,030 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 1,145.12 கோடி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் சா்க்கரைத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா். நாமக்கல் மாவட... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இறந்தோருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி

திருச்செங்கோடு வட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் வாரிசுதாரா்களுக்கு முதல்வா் பொது நிவாரண நிதியை ஆட்சியா் துா்காமூா்த்தி வழங்கினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்... மேலும் பார்க்க