GST 2.0: 'இனி கார், பைக் விலை 12-14% குறையலாம்; ஆனால்...' - நிபுணர் விளக்கும் சி...
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் போலீஸ் குவிப்பு
நாமக்கல் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் காலி குடங்களுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபடபோவதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
நாமக்கல் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட தொட்டிப்பட்டியில் புதன்கிழமை முகாம் நடைபெற்றது. அப்பகுதியில் உள்ளோா் குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் முகாமை முற்றுகையிட வருவதாக தகவல் வந்தது. இதையடுத்து அங்கு போலீஸாா் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனா். அங்கு வந்தோரிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனா்.