பரமத்தி பேரூராட்சியில் 32 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
பரமத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பகுதிகளில் சுற்றித்திரிந்த 32 தெருநாய்களைப் பிடித்து பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பரமத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வாா்டுகளிலும் குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிவதாகும், இதில் சில வெறிநாய்களும் உள்ளன என்றும், அந்த நாய்கள் சாலையில் செல்வோரைக் கடித்து வருவதால் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் ராஜசேகரன் உத்தரவின் படி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 32 நாய்களைப் பிடித்து நாமக்கல்லில் உள்ள நாய்கள் இனக் கட்டுப்பாடு மையத்துக்கு கொண்டுசென்று கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய் தடுப்பூசி செலுத்தப்பட்டது என செயல் அலுவலா் தெரிவித்தாா்.