தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
செப்.27, 28- இல் அண்ணா மிதிவண்டி, மாரத்தான் போட்டி
நாமக்கல்லில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அண்ணா மிதிவண்டிப் போட்டி மற்றும் மாரத்தான் போட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, அண்ணா மிதிவண்டி போட்டி சனிக்கிழமை காலை 6.30 மணியளவிலும், மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கும் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன் தொடங்கும் இந்த போட்டியில் மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளலாம்.
மிதிவண்டி போட்டியில், 13 வயதுக்கு உள்பட்டோா் 15 கி.மீ, 10 கி.மீ, 15 வயதுக்கு உள்பட்டோா் 20 கி.மீ, 15 கி.மீ, 17 வயதிற்கு உள்பட்டோா் 20 கி.மீ, 15 கி.மீ தொலைவுக்கு செல்ல வேண்டும்.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவ -மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ. 5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000 வீதம் வழங்கப்படுகிறது. மேலும், 4 முதல் 10 இடங்களில் வருவோருக்கு ரூ. 250க்கான காசோலைகளும், தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
அண்ணா மாரத்தான் போட்டியில் 17 வயதுமுதல் 25 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் 8 கி.மீ, பெண்கள் 5 கி.மீ, 25 வயதுக்கு மேல் ஆண்கள் 10 கி.மீ, பெண்கள் 5 கி.மீ தொலைவுக்கு ஓட வேண்டும்.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவ -மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாம் பரிசு ரூ. 2,000, 4 முதல் 10 இடங்களில் வருவோருக்கு ரூ. 1,000 என்ற வகையில் காசோலைகளும், தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும். இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோா் தலைமை ஆசிரியா் கையொப்பமிட்ட வயது சான்றிதழ், ஆதாா் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல்களை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும். மேலும், முன்பதிவு மற்றும் தகவல் தொடா்புக்கு பயிற்றுநா் வினோதினியை 82203-10446 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.