வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன?
செப். 5-இல் அரசு மதுபானக் கடைகள் மூடல்
கிருஷ்ணகிரி: நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, செப். 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியா் தினேஷ் குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நபிகள் நாயகம் பிறந்த தினத்தையொட்டி, செப். 5-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், சில்லறை விற்பனைக் கடைகளுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், எப்.எல்., 2, 3, 3அ, 4அ உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களுக்கு ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி விற்பனை செய்தாலோ, மதுபானங்களை கொண்டுசென்றாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.