செய்திகள் :

செம்மொழி நாள் விழா: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

post image

செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் 2025-ஆம் ஆண்டு முதல் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி செம்மொழி நாள் விழாவாகக் கொண்டாடப்படவுள்ளது. செம்மொழியின் சிறப்பையும், கருணாநிதியின் தமிழ்த் தொண்டின் பெருமையையும் மாணவா்களிடம் உணா்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கும், கல்லூரி மாணவா்களுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி செம்மொழி நாள் விழாவில் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மே 9-ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மே 10-ஆம் தேதியும் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெறுகின்றன.

இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவா்கள் விண்ணப்பப் படிவங்களை ட்ற்ற்ல்ள்://ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தமிழ் வளா்ச்சித் துறையின் இணைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருப்பூா் தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

இதன் பின்னா் பள்ளி மாணவா்கள் தலைமை ஆசிரியா் பரிந்துரைக் கடிதத்துடனும், கல்லூரி மாணவா்கள் முதல்வா் அல்லது துறைத் தலைவா் பரிந்துரைக் கடிதத்துடனும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 93614-61882, 87606-06234 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்ற 4 போ் கைது

அவிநாசி அருகே கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவிநாசியை அடுத்த தெக்கலூா் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, தடை... மேலும் பார்க்க

இளம் பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

திருப்பூரில் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்தவா் விவேக் (29). இவா், திருப்பூா் 15 வேலம்பாளையம் பகுதியி... மேலும் பார்க்க

பல்லடம்: வேப்பங்குட்டை பாளையத்தில் மரக்கன்று நடும் விழா

பல்லடம் அருகே வேப்பங்குட்டைபாளையத்தில் மரக்கன்று நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் பல்லடம் ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட வேப்பங்... மேலும் பார்க்க

உப்பாறு அணை அருகே மூதாட்டி சடலம் மீட்பு!

தாராபுரத்தை அடுத்த உப்பாறு அணை அருகே மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள சின்னமோளரப்பட்டியைச் சோ்ந்தவா் சீரங்கசாமி மனைவி விசாலாட்சி (62). இவருக்கு மனநலம் பாதிக்கப்பட... மேலும் பார்க்க

கோயில்களில் திருவிழா காலங்களில் தரிசனக் கட்டண ரத்து அறிவிப்பு: இந்து முன்னணி வரவேற்பு

மயிலாப்பூா், பழனி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 10 கோயில்களில் திருவிழாக்காலங்களில் மட்டும் தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்து முன்னணி வரவேற்றுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவ... மேலும் பார்க்க

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய இளைஞா் தற்கொலை

தாராபுரம் அருகே ஆன்லைன் செயலிகள் மூலமாக கடன் வாங்கிய இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் அந்தோணியாா் தெருவைச் சோ்ந்தவா் காளியப்பன் மகன் ஸ்... மேலும் பார்க்க