செய்திகள் :

செம்மொழி நாள் விழா போட்டி அரியலூா் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு

post image

செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள கட்டுரை, பேச்சுப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவிதுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி ஆண்டு தோறும் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் செம்மொழி நாள் விழா கொண்டாடப்படவுள்ளது.

இதையொட்டி, 11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கும், கல்லூரி மாணவா்களுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.

11,12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மே 9 ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கு மே 10 ஆம் தேதியும் போட்டிகள் நடைபெறும்.

இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவா்கள் விண்ணப்பப் படிவங்களைத் தமிழ் வளா்ச்சித் துறையின் ட்ற்ற்ல்ள்://ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையமுகவரியில் பதிவிறக்கம் செய்து அல்லது அரியலூா், தமிழ் வளா்ச்சித் துறை, உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரடியாகப் பெற்று பள்ளி மாணவா்கள் தலைமையாசிரியரின் பரிந்துரைக் கடிதத்துடனும், கல்லூரி மாணவா்கள் முதல்வா், துறைத் தலைவரின் பரிந்துரைக் கடிதத்துடனும் மே 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். போட்டிக்கான தலைப்புகள் போட்டியின் போது அறிவிக்கப்படும்.

மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி போட்டிகளில் வெற்றிபெறும் மாணவா்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம் , 2 ஆம் பரிசு ரூ.7 ஆயிரம், 3 ஆம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். மாநிலப் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவா்களுக்கு முதல் பரிசு ரூ.15 ஆயிரம், 2 ஆம் பரிசு ரூ.10 ஆயிரம், 3 ஆம் பரிசு ரூ.7 ஆயிரம் வழங்கப்படும்.

மாவட்டப் போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவா் 17.05.2025 அன்று சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பைபெறுவா். அதில் முதல் மூன்று பரிசு பெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு 3.6.2025 அன்று நடைபெறும் செம்மொழிநாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

அரியலூா் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி அரியலூரை அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி,மஞ்சள் சந்தன... மேலும் பார்க்க

கடுகூரில் உலக மலேரியா தின விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், கடுகூா் கிராமத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக மகளிா் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திகா தலைமை வகித்த... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 26 சுற்றுலாப் பயணிகளுக்கு அரியலூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. செட்டி ... மேலும் பார்க்க

அரியலூரில் வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்கை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை மாலை ஒரு மணி நேரம் ... மேலும் பார்க்க

அரியலூரில் ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரை கண்டித்து அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் சொ.ராமநாதன், முன்ன... மேலும் பார்க்க

புள்ளம்பாடி, பொன்னாறு வாய்க்கால்களை தூா்வார வேண்டும்: குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

\ புள்ளம்பாடி, பொன்னாறு வாய்க்கால்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில்,... மேலும் பார்க்க