Kavin Honour Killing: 'யார் சொல்லி அந்தப் பொண்ணு வீடியோ வெளியிட்டுச்சு?'- Eviden...
செயற்கை நுண்ணறிவால் காத்திருக்கும் பயங்கர ஆபத்து: ஜெஃப்ரி ஹிண்டன்
செயற்கை நுண்ணறிவின் மேம்பாடு மற்றும் வளர்ச்சியினால் ஏற்படவிருக்கம் மிக பயங்கர ஆபத்துகளை மென்பொருள் நிறுவனங்கள் மறைப்பதாக செயற்கை நுண்ணறிவின் தந்தை (காட்ஃபாதர் ஆஃப் ஏஐ) என அழைக்கப்படும் ஜெஃப்ரி ஷிண்டன் எச்சரித்துள்ளார்.
ஒன் டெசிஷன் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ஹிண்டன், பெரு நிறுவனங்களின் தலைவர்கள், வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவினால் ஏற்படவிருக்கும் மிகப் பயங்கர ஆபத்துகளைக் கண்டும் காணாமல் இருப்பதாகவும், மூடிய கதவுகளுக்குள் அவற்றைப் பற்றி அவர்கள் நன்கு அறிந்து உணர்ந்திருந்தாலும் தொடர்ந்து மறைத்து வருகிறார்கள் என்று நேரடியாகவே குற்றம்சாட்டியிருக்கிறார்.
மிகப்பெரிய நிறுவனங்களில் இருப்பவர்கள், செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தவிருக்கும் ஆபத்துகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதில்லை. டெமிஸ் போன்றவர்கள் மட்டுமே அதன் ஆபத்துகளை உணர்ந்து ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று ஹிண்டன் தெரிவித்துள்ளார்.