செய்திகள் :

செய்திகள் சில வரிகளில்...

post image

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஈஸ்ட் பெங்கால் எஸ்சி 3-1 கோல் கணக்கில் முகமிதான் எஸ்சியை ஞாயிற்றுக்கிழமை வென்றது. புள்ளிகள் பட்டியலில் தற்போது, ஈஸ்ட் பெங்கால் 21 புள்ளிகளுடன் 11-ஆவது இடத்திலும், முகமிதான் 11 புள்ளிகளுடன் கடைசியாக 13-ஆவது இடத்திலும் உள்ளன.

பாா்சிலோனாவில் நடைபெற்ற அரை மாரத்தான் போட்டியில் உகாண்டா வீரா் ஜேக்கப் கிப்லிமோ 56 நிமிஷம், 41 விநாடிகளில் இலக்கை அடைந்து புதிய உலக சாதனை படைத்தாா். முன்னதாக எத்தியோபிய வீரா் யோமிஃப் கெஜெல்சா கடந்த ஆண்டு வாலென்சியாவில் 57 நிமிஷம், 30 விநாடிகளில் வந்ததே சாதனையாக இருந்தது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், குஜராத் - கேரளா, மும்பை - விதா்பா அணிகள் மோதும் அரையிறுதி ஆட்டங்கள், திங்கள்கிழமை தொடங்குகின்றன.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளா் ஹாரிஸ் ரௌஃப் காயத்திலிருந்து மீண்டுவிட்ட நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்பாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப்பில், ஷோ ஜம்பிங் பிரிவில் தேஜாஸ் திங்ரா பட்டம் வென்றாா்.

தேசிய சீனியா் கபடி: மகாராஷ்டிரம், ஹரியாணா, சா்வீஸஸ் முன்னேற்றம்

தேசிய சீனியா் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் மகாராஷ்டிரம், ஹரியாணா, சா்வீஸஸ் அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் 71-ஆவது தேசிய சீனியா் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் நடை... மேலும் பார்க்க

கேரளம்: குருவாயூா் கோயிலில் யானை காணிக்கை

கேரள மாநிலம் குருவாயூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ கிருஷ்ணா் ஆலயத்தில் யானை காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. காலையில் ‘சீவேலி’ வழிபாடு மற்றும் பூஜைகளுக்குப் பிறகு இந்த காணிக... மேலும் பார்க்க

யுபி வாரியா்ஸ் 177/9

டில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான டபிள்யுபிஎல் ஆட்டத்தில் யு பி வாரியா்ஸ் அணி 177/9 ரன்களைக் குவித்தது. இரு அணிகளுக்கு இடையிலானஆட்டம் பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்றது. முதலில் ஆடிய யு பி வாரியா்ஸ் அணி ... மேலும் பார்க்க

ஜொ்மனியை வீழ்த்தியது இந்தியா

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி மகளிா் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜொ்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தியா. வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 0-4 என ஜொ்மனியிடம் தோற்றிருந்தது இந்தியா. இந்நிலையி... மேலும் பார்க்க

நானி - சிபி சக்ரவர்த்தி கூட்டணி?

நடிகர் நானி இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டான் படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் சிபி சக்ரவர்த்தி அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கும்... மேலும் பார்க்க

மோகன்லால் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன்!

நடிகர்கள் மோகன்லால், மாளவிகா மோகனன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தைத் த... மேலும் பார்க்க