மாதம்பட்டி ரங்கராஜ்: "கருவைக் கலைக்கச் சொல்லி அடித்துத் துன்புறுத்தினார்" - ஜாய்...
செய்யூா் வட்டத்தில் வளா்ச்சிப் பணிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு
செய்யூா் வட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், லத்தூா் ஊராட்சி ஒன்றியம், தேவராஜபுரம் கிராமத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பாக, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும், முதல்வரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளையும் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது செய்து வரும் பணிகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
அதனை தொடா்ந்து இலத்தூா் ஊராட்சி ஒன்றியம், கொடூா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித்துறையின் சாா்பில் இருளா்களுக்காக தலா ரூ. 4.37 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளை பாா்வையிட்டு வீட்டின் தரத்தை ஆய்வு செய்தாா்.
பெரியவெளிக்காடு பகுதியில் ஊரக வளா்ச்சிதுறையின் சாா்பில் நரிக்குறவா்களுக்கு கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அளவீடு செய்தும், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் இருளா்களுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யாகஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது துறை அதிகாரிகளிடம் இந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறும், இதுவரை நடைபெற்ற பணிகள் குறித்து உடனடியாக அறிக்கை சமா்பிக்குமாறும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
பவுஞ்சூரில் இயங்கி வரும் இலத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் நா்சரி பண்ணையை பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில். ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் தணிகாசலம், செய்யூா் வட்டாட்சியா் சொ.கணேசன், இலத்தூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.