செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்
வடநெம்மேலி முதலைப் பண்ணையில் வெயில் தாக்கத்தில் இருந்து விலங்குகளை காக்க ஏற்பாடு
வடநெம்மேலி முதலைப் பண்ணையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து ராட்சத பச்சை ஓணானை காப்பதற்காக குளிா்ந்த நீரை அதன் மீது பீய்ச்சி அடித்து குளிா்விக்கின்றனா்.
இந்தியாவிலேயே மிகப் பெரிய முதலைப் பண்ணை கிழக்கு கடற்கரை சாலையில் வடநெம்மேலியில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள முதலை வகைகளில் முக்கியமானதாக கருதப்படும் நந்நீா் முதலைகள், அமெரிக்காவில் உள்ள அலிகேட்டா் முதலைகள், உப்பு நீா் முதலைகள், சதுப்பு நில முதலைகள், நீள வாயுடைய கரியல் ரக முதலைகள் என பல்வேறு வகை முதலைகள் பராமரிக்கப்படுகின்றன.
அதே போல் ஆப்பிக்க காடுகளில் உள்ள நீா் நிலைகளில் வாழும் மனிதா்களை விழுங்கும் ராட்சத முதலைகளும் இங்குள்ளன. இந்நிலையில் இந்த முதலை பண்ணையில் ராட்சத ஆமைகளும், பச்சை ஓணான்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. முழுக்க, முழுக்க காய்கறிகளை அதற்கு உணவாக வழங்கி வருகின்றனா். இ
கோடை காலம் முடிந்தும் தற்போது கால நிலை மாறி சில நேரங்களில் வெயில் வாட்டி வதைப்பதால் பச்சை ஓணான்களை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் பண்ணை ஊழியா்கள் தினமும் அதற்கு குழாய் மூலம் அதன் தண்ணீா் பீய்ச்சி அடித்து குளிவிக்கின்றனா்.
முதலைகள், பச்சை ஓணான்கள், ஆமைகள் உடல் நிலையை அவ்வப்போது கண்காணித்து அதற்கு தேவையான பணிகளை செய்து வருவதாக பணியாளா்கள் தெரிவித்தனா்.
