மெட்ரோ ரயில்: அயனாவரம் - பெரம்பூர் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு!
”செல்போன் எடுத்துச் செல்லவில்லை..”- ஆனால் கழிப்பறை இருக்கை வெடித்து இளைஞருக்கு தீ காயம் - எப்படி?
வீட்டில் உள்ள கழிப்பறை இருக்கை வெடித்து இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவின் செக்டார் 36 இல் இந்த சம்பவம் நடந்துள்ளது. வழக்கம்போல கழிப்பறை பயன்படுத்துவதற்காக ஆஷு என்பவர் வீட்டில் கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென கழிப்பறையின் இருக்கை வெடித்து அவருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அவர் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டபோது அவருக்கு 35% தீக்காயங்கள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

செல்போன் பயன்படுத்தினாரா?
கழிப்பறைக்கு செல்லும் போது ஆஷூ செல்போன் அல்லது வேறு எந்த ஒரு மின்னணு சாதனத்தையும் பயன்படுத்தவில்லை என்று அவரின் தந்தை சுனில் டி டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் கூறியிருக்கிறார்.
கேட்ஜெட் போன்ற வெடிப்புகள் இல்லை என்றும் அந்த சமயத்தில் மின் கோளாறு எதுவும் நடக்கவில்லை, வீட்டில் இருந்த ஏர் கண்டிஷனர் மற்றும் பிற உபகரணங்கள் அனைத்தும் நன்றாக இயங்கின என்றும் சுனில் கூறியிருக்கிறார்.
வெடிப்புக்கான காரணம் என்ன?
இந்தக்கட்ட தகவலின்படி, மீத்தேன் வாயு குவிப்பு வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று குடும்பத்தினர்கள் கூறியுள்ளனர். அதாவது கழிப்பறையில் குழாய்கள் அடைக்கப்படுதல் விளைவாக இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
இது குறித்து குடியிருப்பாளர் ஒருவர் டைப்ஸ் ஆப் இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டதன்படி, பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாத கழிப்பறை குழாய்களில் மீத்தேன் வாயு குவியக்கூடும். காற்று போதுமானதாக இல்லாத போது அழுத்தத்தின் கீழ் வெடிக்க கூடும் என்று கூறியிருக்கிறார்.