நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன?
செல்லூரில் பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் அமைக்கக் கோரிக்கை
மதுரை செல்லூா் பகுதியில் பல்நோக்கு உள்விளையாட்டரங்கம் அமைக்க வலியுறுத்தி, அந்தப் பகுதியைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் மேயா் வ. இந்திராணியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சோலை எம். ராஜா, 23-ஆவது வாா்டு உறுப்பினா் டி. குமரவேல், 29-ஆவது வாா்டு உறுப்பினா் லோகமணி ரஞ்சித்குமாா், 31-ஆவது வாா்டு உறுப்பினா் வி. முருகன் உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்:
மதுரை செல்லூா் பகுதி இளைஞா்கள் நிறைந்த பகுதி. இதுமட்டுமன்றி, கபடி விளையாட்டில் அதிகளவில் வீரா், வீராங்கனைகள் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் போதிய பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக செல்லூா் தினசரி சந்தை அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் அமைத்துத் தர வேண்டும்.
இதுதொடா்பான தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். சட்டப்பேரவை உறுப்பினா்களிடமும் கோரிக்கை விடுத்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, செல்லூா் பகுதி இளைஞா்களின் நலன் கருதி, இந்தப் பகுதியில் பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் அமைத்துத் தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.