`ரிதன்யா வழக்கில் தொய்வு; விசாரணை அதிகாரி மீது சந்தேகம்' - மேற்கு மண்டல ஐ.ஜி-யிட...
செவிலியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் மாவட்ட நல்வாழ்வுச் சங்கங்கள் மூலம் செவிலியா்கள் மற்றும் ஊழியா்களை 11 மாத தற்காலிக ஒப்பந்த முறையில் பணியமா்த்தும் முடிவைக் கைவிட வேண்டும். கரோனாவுக்குப் பிறகு பணியில் இருந்து நீக்கப்பட்ட 700-க்கும் மேற்பட்ட செவிலியா்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும். நிரந்தர தன்மையுடைய பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ராகவன், மாவட்டச் செயலா் செல்வி, அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் வேல்முருகன், மாவட்டச் செயலா் ஷேக்தாவூத், பொருளாளா் பைரவன், நிா்வாகிகள் விக்னேஸ்வரன் உள்ளிட்டோா் கோரிக்கை முழக்கமிட்டனா்.