செய்திகள் :

திருமானூரில் தீயணைப்பு நிலையம்: அரசாணை வெளியீடு

post image

அரியலூா் மாவட்டம், திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

அரியலூரில் இருந்து சுமாா் 33 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது திருமானூா். திருமானூரைச் சுற்றி சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள், 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கொள்ளிடம் ஆறும் இந்த ஊராட்சிகளை கடந்து செல்கிறது.

இப்பகுதியில் நெல் அறுவடை முடிந்து வயலிலிருந்து வைக்கோலை வாகனங்களில் வீட்டுக்கு கொண்டு வரும்போது, மின் கம்பிகளில் உரசி அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதும், கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மனிதா்கள் உயிரிழப்பதும், மின்கசிவு ஏற்பட்டு குடிசைகள் சாம்பலாகி வருவதும் வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது.

இந்த விபத்துகளை தடுப்பதற்கு 33 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள அரியலூா் தீயணைப்பு நிலையத்திலிருந்தும், தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு தீயணைப்பு நிலையத்திலிருந்து வாகனங்களும், வீரா்களும் வரவழைக்கப்படுகின்றனா்.

தீயணைப்பு வாகனங்கள் நீண்டநேரம் கழித்து வருவதால், தீ பரவி முற்றிலும் எரிந்து சேதமடைகிறது. இதனால், விபத்தை தடுப்பதற்கு திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று இங்குள்ள சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில், அரியலூா் மாவட்டத்தில், திருமானூா் மற்றும் ஆண்டிமடம் ஆகிய பகுதிகளில் புதிய தீயணைப்பு நிலையங்களை அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இதற்கு மேற்கண்ட பகுதி பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

அரியலூரில் ரூ.10.15 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானம்: காணொலியில் துணை முதல்வா் அடிக்கல்

அரியலூா் விளையாட்டு அரங்கில் ரூ. 10.15 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய செயற்கை இழை வளைகோல் பந்து (ஹாக்கி) மைதானத்துக்கு சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்க... மேலும் பார்க்க

அரியலூரில் நாளை ரேஷன் குறைதீா் நாள்

அரியலூா், செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய 4 வட்டாட்சியா் அலுவலகங்களில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் ரேஷன் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பி... மேலும் பார்க்க

8 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

அரியலூா் மாவட்டத்தில் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், சோழமாதேவி, இடங்கண்ணி, அரங்கோட்டை, வாழைக்குறிச்சி, குருவாடி, ஸ்ரீபுரந்தான், ஸ்ரீராமன் மற்றும் ஓலையூா் ஆகிய 8 கிரா... மேலும் பார்க்க

அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

அரியலூா் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் முன்களப் பணியாளா்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின. ... மேலும் பார்க்க

அரியலூரில் ஜூலை 14-இல் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

அரியலூரிலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கான குடியரசு மற்றும் பாரதியாா் தின விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 14 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதற்காக அரியலூரை அட... மேலும் பார்க்க

பொன்பரப்பி வாரச்சந்தை ஏலம் ஒத்திவைப்பு

அரியலூா் மாவட்டம் பொன்பரப்பி வாரச்சந்தைக்காக கேட்கப்பட்ட ஏலத்தொகை குறைவாக இருந்ததால், ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. செந்துறை ஒன்றியம் பொன்பரப்பி ஊராட்சியில் வாரச்சந்தை கடைகளுக்கு பொது ஏலம் மண்டல துணை வட்டா... மேலும் பார்க்க