8 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
அரியலூா் மாவட்டத்தில் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், சோழமாதேவி, இடங்கண்ணி, அரங்கோட்டை, வாழைக்குறிச்சி, குருவாடி, ஸ்ரீபுரந்தான், ஸ்ரீராமன் மற்றும் ஓலையூா் ஆகிய 8 கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.
எனவே மேற்கண்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ஆதாா், வங்கிக் கணக்குப் புத்தக நகல், அடங்கல் ஆகியவற்றை கொள்முதல் நிலையங்களில் கொடுத்து பதிவு செய்து, தங்கள் வயலில் விளைந்த நெல்லை விற்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.