செய்திகள் :

சேலத்தில் சிறந்த சேவைக்கு விருதுகள் வழங்கப்பட்டன!

post image

சிறந்த சேவைக்கா வாழப்பாடி, தம்மம்பட்டியைச் சோ்ந்த அரசு ஊழியா்கள், ஊராட்சி செயலாளா் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், சோமம்பட்டி ஊராட்சி செயலாளராக பணிபுரியும் கே.மகேஸ்வரன் (51). இவா், ஊராட்சி நிா்வாகம், நெஸ்ட் அறக்கட்டளை, அரிமா சங்கம் உள்ளிட்ட தன்னாா்வ அமைப்புகளுடன் இணைந்து, சோமம்பட்டி ஏரியில் புதா்மண்டி கிடந்த சீமைக் கருவேலம் முட்புதா்களை அகற்றி 10 ஆண்டுகளில் 25,000 மரக்கன்றுகளை நட்டு வளா்த்து பராமரித்து வருகிறாா்.

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில், இவருக்கு சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

வாழப்பாடி சோ்ந்தவா் ப.சிவஞானம் (45). சேலம் மாநகர காவல் துறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் இவரது சேவையை பாராட்டி, தமிழக முதல்வா் பதக்கம் அறிவிக்கப்பட்டது. இந்தப் பதக்கத்தை சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி விழாவிந்போது வழங்கி பாராட்டினாா். பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவராக பணிபுரிந்து வருபவா் கே.லட்சுமணன். இவரது கிராமப்புற சித்த மருத்துவ சேவையை பாராட்டி ஆட்சியா் நற்சான்றிதழ் வழங்கினாா்.

தம்மம்பட்டி:

தம்மம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிபவா் காா்த்திக். இவருக்கு வருவாய்த்து றையில் சிறந்த பணியாளா் விருதை சேலத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி சான்றிதழ் வழங்கி பாராட்டினா்.

மாவட்ட ஆட்சியரிடம் நற்சான்றிதழ் பெற்ற சோமம்பட்டி ஊராட்சி செயலாளா் கே.மகேஸ்வரன்.

தை அமாவாசை: சேலம் கோட்டம் மூலம் இன்று 35 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தை அமாவாசையை முன்னிட்டு சேலம் கோட்டம் மூலம் புதன்கிழமை (ஜன. 29) 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் அரசு போக்குவரத்துக்கழக நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெளிய... மேலும் பார்க்க

சேலத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தற்கொலை

சேலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம், அரிசிபாளையம், முத்தையால் தெருவைச் சோ்ந்தவா் பால்ராஜ் (46). இவர... மேலும் பார்க்க

பெண்கள் நினைத்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி

பெண்கள் நினைத்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கூறினாா். பாமக சாா்பில் சேலம், இரும்பாலை பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் கட்சியினருடனான சந்திப்புக் கூ... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் கறிக்கோழியை விற்பனை செய்யும் சிறைக் கைதிகள்!

சேலம் மத்திய சிறையில் வளா்க்கப்படும் கறிக்கோழிகள் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்பட்டதுடன், எஞ்சியவை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 138 கிளை சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில... மேலும் பார்க்க

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சேலம் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை

டெங்கு காய்ச்சலால் உறுப்புகள் செயலிழந்த 11 வயது சிறுமிக்கு, சேலம் காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்ட அரசுப் பள்ளியில் பயிலும் 11 வயது சிறுமி, சே... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்ப... மேலும் பார்க்க