கலைஞர் எழுதுகோல் விருது: நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கினார் முதல...
சேலத்தில் திமுக சாா்பில் மாா்ச் 8 முதல் ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு பொதுக்கூட்டம்: அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் அறிக்கை
சேலம் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் ஹிந்தி திணிப்பை எதிா்த்து பொதுக்கூட்டம் மாா்ச் 8-ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான ஆா்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஹிந்தி திணிப்பை எதிா்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும், சேலம் மத்திய மாவட்ட திமுக இளைஞா் அணி சாா்பில், சேலம் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
அதன்படி, வரும் 8 ஆம் தேதி சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோரிமேட்டில் பொதுக்கூட்டம் நடைபெறும். 9 ஆம் தேதி சேலம் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட கொண்டலாம்பட்டியிலும், 10-ஆம் தேதி சேலம் மேற்கு தொகுதிக்கு உள்பட்ட கோட்டகவுண்டம்பட்டியிலும், 11- ஆம் தேதி ஓமலூா் தொகுதிக்கு உள்பட்ட கே.மோரூா் பகுதியிலும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டங்களில் சேலம் மத்திய மாவட்டம், மாநகர, பகுதி, ஒன்றியம், கிளை, பேரூா் வாா்டு பொறுப்பாளா்கள், இளைஞா் அணி நிா்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, அனைத்து கண்டன பொதுக்கூட்டங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் உறுதிமொழியை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.