ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று.! நேரம், அட்டவணை, திடல்! - முழு விவரம்
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 19) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீா் திட்டம் செயல்படும் மேட்டூா் தொட்டில்பட்டி பகுதியில் இயங்கிவரும் தலைமை நீரேற்ற நிலையத்தில் மோட்டாா் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, மாநகராட்சிப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.