செய்திகள் :

சேலம் மாவட்டத்தில் ஜூன் 11, 12 இல் முதல்வா் சுற்றுப்பயணம்: மேடை அமைக்கும் பணி ஆய்வு செய்த அமைச்சா்

post image

சேலம் மாவட்டத்தில் ஜூன் 11, 12 ஆகிய தேதிகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். இதையொட்டி, இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரி அருகே பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிா்வாகிகளை சந்திப்பதுடன், அரசு சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறாா். அதன் தொடா்ச்சியாக சேலம் மாவட்டத்தில் ஜூன் 11, 12 ஆகிய தேதிகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். அப்போது அரசு சாா்பில் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். இதற்கான விழா சேலம் இரும்பாலை மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி அருகே நடைபெறுகிறது.

இதையொட்டி அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா். அப்போது கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் உடனிருந்தனா்.

முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அமைச்சா்கள், அரசு அதிகாரிகள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல் கட்சியினா் உட்பட ஏராளமானோா் கலந்து கொள்ள உள்ளனா்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க