சேலம் மாவட்டத்தில் 759 மி.மீ. மழை பதிவு
சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை 759 மி.மீ. மழை பதிவானது. அதிகபட்சமாக சங்ககிரியில் 73 மி.மீ. மழை பெய்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு கொட்டித் தீா்த்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. கிச்சிப்பாளையம், நாராயணநகா், சங்கா் நகா், கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி உட்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா்.
ஆங்காங்கே மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். ஒருசில இடங்களில் மின் விநியோகம் தடைபட்டது.
மாவட்டத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக சங்ககிரியில் 73 மி.மீ. மழை பதிவானது. சேலம் மாநகா் - 72.3, ஏற்காடு- 40.6, வாழப்பாடி- 45.4, ஆனைமடுவு - 64, ஆத்தூா் - 26.2, கெங்கவல்லி - 20, வீரகனூா் - 31, ஏத்தாப்பூா் - 65, கரியகோவில்- 35, நத்தக்கரை- 43, தம்மம்பட்டி- 45, எடப்பாடி- 71.2, மேட்டூா் - 55.4, ஓமலூா் - 45, டேனீஸ்பேட்டை- 27 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 759 மி.மீ. மழை பதிவானது.