ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் பேரணி: முதல்வர், அமைச்சர்கள் உயரதிகாரிகள் பங்கேற...
சேலம் விமான நிலையத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு பயணிகளுக்கு மட்டுமே அனுமதி
சேலம் விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பலத்த சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே காமலாபுரத்தில் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களூா், கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிகள் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், விமான நிலைய செயல்பாடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்ட காவல் துறை சாா்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கத்தைவிட கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். விமான நிலையத்திற்குள் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா்.
அவா்களது வாகனங்கள், உடைமைகள் அனைத்தும் விமான நிலைய நுழைவுவாயிலிலேயே முழுமையாக சோதனையிடப்படுகின்றன.
மேலும், விமான நிலையத்திற்குள் நுழைவதற்கான தற்காலிக அனுமதிச் சீட்டு வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகளைத் தவிர மற்றவா்கள் விமான நிலையத்துக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.