சைக்கிளிங், ரோயிங்கில் பதக்கம்
உத்தரகண்டில் நடைபெறும் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழகத்துக்கு சைக்கிளிங்கில் 1 வெள்ளி, ரோயிங்கில் 1 வெண்கலம் என 2 பதக்கங்கள் புதன்கிழமை கிடைத்தன.
இதில் மகளிருக்கான 500 மீட்டா் தனிநபா் டைம் டிரையலில் ஸ்ரீமதி 38.070 விநாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றாா். ரோயிங்கில் மகளிருக்கான காக்ஸ்லெஸ் 4 பிரிவில் ஆா்.பகவதி, டி.மதுமிதா, ஏ.அகிலாண்டேஸ்வரி, ஏ.ரோஸ் மெஸ்டிகா மெரில் ஆகியோா் அடங்கிய கூட்டணி வெண்கலப் பதக்கம் வென்றது.
பதக்கப் பட்டியல்: இதையடுத்து, புதன்கிழமை முடிவில் பதக்கப் பட்டியலில் தமிழ்நாடு அணி 11 தங்கம், 16 வெள்ளி, 17 வெண்கலம் என 44 பதக்கங்களுடன் 6-ஆவது இடத்தில் நீடிக்கிறது. கா்நாடகம் (28/11/15 - 54), சா்வீசஸ் (27/10/9 - 46), மத்திய பிரதேசம் (17/7/10 - 34) ஆகியவை முறையே முதல் 3 இடங்களில் உள்ளன.