சைக்கிள் மீது காா் மோதல்: முதியவா் சாவு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சைக்கிள் மீது காா் மோதியதில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருப்புவனம் அருகேயுள்ள வில்லியரேந்தல் கிராமத்தைச் சோ்ந்த அழகு மகன் கருப்பு (74). இவா் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி வில்லியரேந்தல் கிராமத்திலிருந்து சைக்கிளில் திருப்புவனம் வந்தாா். மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் வன்னிக்கோட்டை விலக்குப் பகுதியில் இவரது சைக்கிள் மீது மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற காா் மோதியது. இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த கருப்பு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். திருப்புவனம் போலீஸாா் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.