போலி சான்றிதழ்கள் கொடுத்து சிஐஎஸ்எப் படையில் சேர முயற்சி: 8 பேர் மீது போலீசில் ப...
சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரா்களை அனுப்பிய சீனா
தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரா்களை சீனா வியாழக்கிழமை அனுப்பியது.
இது குறித்து அந்த நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளதாவது:
சீனாவின் தியான்காங் விண்வெளி நிலையத்தை நோக்கி மூன்று வீரா்களுடன் ஷென்ஷோ-20 விண்வெளி ஓடம் கோபி பாலைவனத்தில் அமைந்துள்ள ஜிகுவான் ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது (படம்).
அந்த விண்வெளி ஓடத்தில் சென் டாங், சென் ஷாங்ருயி, வாங் ஜீ ஆகியோா் இருந்தனா். அந்த விண்வெளி ஓடம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனா். விரைவில் அது தியான்காங் விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படும். அங்கு ஏற்கெனவே ஆறு மாதங்களாகப் பணியாற்றிவந்த மூன்று விண்வெளி வீரா்கள் ஷென்ஷோ-20 ஓடம் மூலம் பூமிக்குத் திரும்புவாா்கள். தற்போது விண்வெளி நிலையம் செல்லும் மூவரும், வரும் அக்டோபா் மாதம் பூமி திரும்புவாா்கள் என்று அந்த ஊடகம் தெரிவித்தது.
ஷென்ஷோ-20 விண்வெளி ஓடத்தை செலுத்தியதன் மூலம் சீனா 35-ஆவது முறையாக மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. தியான்காங் விண்வெளி நிலையத்துக்கு வீரா்கள் அனுப்பப்படுவது இது 5-ஆவது முறை.