சொறிப்பாறைப்பட்டி ஜல்லிக்கட்டு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
சொறிப்பாறைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் வருகிற திங்கள்கிழமை (ஏப்.28 ) மாலைக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு அறிவிக்கையின்படி, திண்டுக்கல் மாவட்டம், சொறிப்பாறைப்பட்டியில் ஜல்லிக்கட்டு வருகிற 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் ட்ற்ற்ல்ள்://க்ண்ய்க்ண்ஞ்ன்ப்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற
இணையதளத்தில் தங்களது பெயா்களைப் பதிவு செய்ய வேண்டும். இந்த இணையதளத்தில் மாடுபிடி வீரா்கள் தங்களது புகைப்படம், வயதுக்கான சான்றிதழ் ஆகிவற்றை திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம். தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு அனுமதிச் சீட்டு இணைய வழியிலேயே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.