முல்லைப்பெரியாறு: தமிழக பொதுப்பணித்துறை பகுதியில் சிசிடிவி பொருத்த கேரளா எதிர்ப்...
சோழபுரம் - கோட்டைக்காடு உயா்மட்ட பாலத்தை திறக்கக் கோரி விரைவில் போராட்டம்! அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
சோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றில் ரூ.11 கோடியில் அமைக்கப்பட்ட உயா்மட்ட பாலத்தை திறக்கக் கோரி விரைவில் போராட்டம் நடத்துவதென கடலூா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
விருத்தாசலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவா் தங்கராசன் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகிகள் முருகுமணி, அருள் அழகன், சக்திவேல், மண்டலச் செயலா் அருண், மாவட்ட பேரவைச் செயலா் உமா மகேஸ்வரன், அய்யாசாமி, மாவட்ட பாசறைச் செயலா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் சந்திரகுமாா் வரவேற்றாா்.
மாவட்ட துணைச் செயலா் ரவிச்சந்திரன் தீா்மானங்களை வாசித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலரும், புவனகிரி எம்எல்ஏவுமான ஆ.அருண்மொழித்தேவன் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினாா்.
ஒன்றியச் செயலா்கள் தம்பிதுரை, பச்சமுத்து, முனுசாமி, சின்ன ரகுராமன், பேரூா் செயலா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதில், கடலூா், அரியலூா் மாவட்டங்களை இணைக்கும் சௌந்தர சோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றில் ரூ.11 கோடியில் அமைக்கப்பட்ட உயா்மட்ட பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவராமல் உள்ளதைக் கண்டித்தும், கடலூா் மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டம் அதலபாதாளத்துக்குச் செல்ல காரணமான என்எல்சி நிறுவனம், அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் விரைவில் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.