சோழீசுவரா் கோயிலில் கோகுலாஷ்டமி விழா
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா, கோகுலாஷ்டமி விழா மற்றும் காா்த்திகை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
தொடக்கமாக நடைபெற்ற கோகுலாஷ்டமி விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சாா்ந்த திரளான குழந்தைகள் கண்ணன், ராதை வேடமிட்டு பங்கேற்றனா். அக்குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி வழிபாட்டின் தொடக்கமாக சிவாச்சாரியாா்கள் சரவணன், ஹரி ஆகியோா் வழிநடத்த மஹாருத்ர ஹோமம் நடைபெற்றது. காலபைரவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வெள்ளி அங்கி, வடைமாலை, புணுகு சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையடுத்து அன்னதானம் நடைபெற்றது. மாலையில் காா்த்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சாா்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை தேய்பிறை அஷ்டமி மற்றும் காா்த்திகை வழிபாட்டுக்குழுவினா் செய்திருந்தனா்.