சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்!
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கமாக ஆவுடையநாயகி சமேத சோழீசுவரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயில் முற்றோதல் குழுவினரால் திருவாசகம், பன்னிரு திருமுறைகள் ஓதப்பட்டன.
நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச்சாா்ந்த சிவனடியாா்கள், சிவபக்தா்கள் மற்றும் முற்றோதல் குழுவினா் திரளாகப் பங்கேற்றனா்.