செய்திகள் :

ஜகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு

post image

மாநிலங்களவையின் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகக் குற்றஞ்சாட்டி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

மாநிலங்களவையில், அவை நடவடிக்கைகளின்போது, கட்சி பாகுபாட்டுடன், ஜகதீப் தன்கர் நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

நாடாளுமன்ற வரலாற்றிலேயே, அவைத் தலைவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது இதுவே முதல்முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு சமாஜ்வாதி, திரிணமூல், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 60 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் அலுவலகங்களைச் சூறையாடிய பாஜகவினர்!

மும்பை மற்றும் கொல்கத்தாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களை பாஜகவின் இளைஞர் அணியினர் சூறையாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மும்பையில் வியாழக்கிழமை (டிச. 19) காங்கிரஸுக்கு எதிரான முழக்கத்தோடு அலுவலகத்தி... மேலும் பார்க்க

காயமடைந்த எம்.பி.க்களிடம் நலம் விசாரித்த மோடி!

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த பாரதிய ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகப் பேசி, நலம் விசாரித்தார். போராட்டத்தில் காயமடைந்த பாஜக எம்.பி.க்கள் பிரதாப் ச... மேலும் பார்க்க

டேய் தகப்பா.. என்னடா இதெல்லாம்... அஸ்வின் நகைச்சுவைப் பதிவு!

அஸ்வின் திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அஸ்வின் தந்தை கூறியதற்கு அஸ்வின் மறுப்பு தெரிவித்துள்ளார்.அஸ்வினின் திடீர் ஓய்வு குறித்து, அவரது தந்தை அளித்த பேட்டி சமூக வலைதளங்களி... மேலும் பார்க்க

பிரிட்டன் மன்னருடன் பேசிய பிரதமர் மோடி!

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச. 19) தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். இதில் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலான ஆக்கப்பூர்வமான ... மேலும் பார்க்க

ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதியற்றவர்! -பாஜக விமர்சனம்

ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதியற்றவர் என்று பாஜக எம்பியும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.அம்பேத்கரை அவமதிப்பு செய்த மத்திய உள்துறை... மேலும் பார்க்க

அம்பேத்கர் குறித்த பாஜகவின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது: மமதா

அம்பேத்கரை அவமதிக்கும் வகையிலான பாஜகவின் பேச்சு அதிர்ச்சி அளிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறையை ரத்து செய்த பாஜகவின் செயல் மிகவும் ம... மேலும் பார்க்க