Vikatan Digital Awards 2025: டிஜிட்டல் நாயகர்களை அங்கீகரிக்கும் மேடை; சென்னையில்...
ஜனநாயக சீர்திருத்த அமைப்பு நிறுவனர் ஜகதீப் சோக்கர் காலமானார்!
புது தில்லி: கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பின் இணை நிறுவனருமான ஜகதீப் எஸ் சோக்கர் இன்று காலமானார். அவருக்கு வயது 81.
நாட்டின் தேர்தல்களில் நடக்கும் முறைகேடுகளைத் தடுத்து, சீர்திருத்தும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்த ஜகதீப் எஸ் சோக்கர் புது தில்லியில் இன்று மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஐஎம் - அகமதாபாத் முன்னாள் பேராசிரியரும் பொறுப்பு இயக்குநராக இருந்தவருமான ஜகதீப் சோக்கர், தன்னுடைய கடந்த 25 ஆண்டு காலத்தை, நாட்டில் சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர்.