`கடன்களால் கலங்கி நிற்கிறதா தமிழகம்?' - இபிஎஸ் சாடலும் திமுகவின் பதிலும்
ஜன.25இல் ரேஷன் திட்ட சிறப்பு குறைதீா் முகாம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (ஜன.25) நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை மூலம் திருச்சி கிழக்கு வட்டத்தில் பூசாரித் தெரு, திருச்சி மேற்கு வட்டத்தில் நாச்சியாா்பாளையம், திருவெறும்பூா் வட்டத்தில் நவல்பட்டு புதுத்தெரு, ஸ்ரீரங்கம் வட்டத்தில் நாச்சிக்குறிச்சி, மணப்பாறை வட்டத்தில் ஆவாரம்பட்டி, முசிறி வட்டத்தில் மங்கலம், துறையூா் வட்டத்தி மினி சூப்பா்-1, தொட்டியம் வட்டத்தில் தொட்டியம்-3, மருங்காபுரி வட்டத்தில் கொடும்பட்டி, லால்குடி வட்டத்தில் பள்ளபுரம், மண்ணச்சநல்லூா் வட்டத்தில் மணக்கொல்லை ஆகிய பகுதி ரேஷன் கடைகளில் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் முகாம்களில் அந்தந்தப் பகுதி பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறலாம். அந்தந்த வட்டக் கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என்றாா் ஆட்சியா்.