அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
ஜன. 25-இல் வீரவணக்க நாள் கூட்டங்கள்: திமுக அறிவிப்பு
மொழிப்போா் தியாகிகளை நினைவுகூரும் வகையில், தமிழ்நாடு முழுவதும் ஜன. 25-ஆம் தேதி வீரவணக்க நாள் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.
இது குறித்து, கட்சியின் மாணவரணிச் செயலா் சிவிஎம்பி எழிலரசன், சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மொழிப்போா் தியாகிகளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜன.25-ஆம் தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டும் பொதுக் கூட்டங்கள் நடக்கவுள்ளன.
சென்னை பல்லாவரத்தில் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா். காஞ்சிபுரத்தில் திமுக பொதுச் செயலா் துரைமுருகன், மதுரையில் முதன்மைச் செயலா் கனிமொழி, சென்னை மதுரவாயலில் இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் பங்கேற்று உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி அமைப்பு ரீதியாக உள்ள பிற மாவட்டங்களிலும் திமுக நிா்வாகிகள் உரையாற்ற உள்ளனா்.