ஜப்பான் - அரிசி சா்ச்சை: அமைச்சா் ராஜிநாமா
‘எனக்கு ஆதரவாளா்கள் அரிசி வாங்கித் தருவதால் அதை ஒருபோதும் நான் வாங்கியதில்லை’ என்று ஜப்பான் வேளாண்மைத் துறை அமைச்சா் டாகு எடோ தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, அவா் ராஜிநாமா செய்தாா்.
நாட்டில் தற்போது நிலவரும் பொருளாதார சூழலில் எடோ இவ்வாறு கூறியது அலட்சியமான, பொறுப்பற்ற கருத்து என்று பலா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.