Dhoni : 'இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகக்கூடாது!' - தோல்வி குறித்து தோனி
ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு அச்சுறுத்தல்: 22 குடும்பங்கள் வேறு இடத்துக்கு மாற்றம்!
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள 22 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புகழ்பெற்ற மச்சைல் மாதா ஆலயத்தை இணைக்கும் கிஷ்த்வார்-பத்தார் சாலையில் இன்று மூன்றாவது நாளாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுு.
இதுதொடர்பாக மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ராஜேஷ் குமார் ஷவான் கூறுகையில்,
கிஷ்த்வார்-பெத்தார் சாலையில் பதர்னகியின் சிங்ரா நல்லாவில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதியை ஆய்வு செய்து, நிலச்சரிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை மதிப்பிடுவதிலும், தற்போது நடவடிக்கைகளை மதிப்பிடுவதிலும் கவனம் செலுத்தி வருகின்றது.
தொடர்ச்சியான மண்சரிவு மற்றும் நிலச்ச்ரிவு அச்சுறுத்தல் காரணமாக மக்களின் பாதுகாப்பிற்காக சில தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோர். மலையடிவார கிராமத்தில் உள்ள சுமார் 22 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, அவர்களுக்குத் தேவையான பொருள்கள், தங்குமிடம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை எந்தவொரு வீடுகளிலும் விரிசல்கள் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதியில் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், சாலையின் 200 மீட்டருக்கும் அதிகமான பகுதி மண்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளதாகவும், மலையிலிருந்து தொடர்ந்து உருண்ட கற்கள் சாலை அகற்றும் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் அவர் கூறினார்.