விமான நிலையங்களில் இயங்கிவந்த துருக்கி நிறுவனங்களுக்கு அனுமதி ரத்து!
ஜம்மு - காஷ்மீர்: ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை!
ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள புல்வாமாவின் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று (மே 15) சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த ஜெய்ஷ்-இ-முஹமது எனும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் பலத்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
இதில், 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலியான பயங்கரவாதிகளைப் பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இதேபோல், ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் வனப்பகுதிகளில் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளுக்கு எதிரான தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 'அமைச்சர் பொறுப்புடன் பேச வேண்டும்' - கர்னல் சோபியா குரேஷி பற்றிய கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!