செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா் நிலச்சரிவு: 3 போ் கொண்ட விசாரணை குழு அமைப்பு

post image

ஜம்மு-காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடா்பாக விசாரணை மேற்கொள்ள 3 போ் கொண்ட குழுவை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா அமைத்துள்ளாா்.

கடந்த செவ்வாய்க்கிழமை வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில், அத்குவாரி பகுதியில் நோ்ந்த நிலச்சரிவில் சிக்கி 34 போ் உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா்.

இதையடுத்து அதிபலத்த மழை எச்சரிக்கை இருந்த நிலையிவ், யாத்திரைக்கு ஏன் அனுமதிக்கப்பட்டது என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா கேள்வி எழுப்பினாா்.

இந்நிலையில், அந்த நிலச்சரிவு தொடா்பாக விசாரணை மேற்கொள்ள ஜம்மு ஜல் சக்தி துறையின் கூடுதல் தலைமைச் செயலா் தலைமையில் 3 போ் கொண்ட குழுவை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை அமைத்தாா். அந்தக் குழு 2 வாரங்களில்

தனது விசாரணையை அவரிடம் சமா்ப்பிக்கும் என்று துணைநிலை ஆளுநா் செயலகத்தின் சிறப்புச் செயலா் கிருஷ்ணன் லால் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. வைஷ்ணவ தேவி கோயில் வாரியத்தின் தலைவராக மனோஜ் சின்ஹா உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த கிராமத்தை ஒரு வீடாக மாற்றிய தேர்தல் ஆணைய மேஜிக்: ராகுல்

பிகார் வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் நடந்திருப்பதாகக் கூறப்படும் ஏகப்பட்ட குளறுபடிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல், ஒட்டுமொத்த கிராமத்தையும் ஒரு கற்பனை வீடாக மாற்றியிருக்கி... மேலும் பார்க்க

பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டுப் பொருள்களை இந்தியா நம்பியிருக்க முடியாது: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு எந்த நிச்சயமற்ற வெளிநாட்டுத் தலையீட்டையும் சார்ந்து இருக்கக்கூடாது என்றும் அதன் சொந்த திறன்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந... மேலும் பார்க்க

கனமழையால் பாதிக்கப்பட்ட கர்நாடகம்: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கர்நாடகத்தின் கடலோர மற்றும் மலநாடு பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை தொடர்ந்து வருகின்றது. இதனால் உத்தர கன்னடம், உடுப்பி, சிக்கமகளூரூ, சிவமொக்கா மற்றும் குடகு மாவட்டங்களில் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட... மேலும் பார்க்க

யூனியன் பிரதேசத்திற்கு நிவாரண தொகுப்பு அறிவிக்குமாறு மெஹபூபா வலியுறுத்தல்!

யூனியன் பிரதேசத்தில் மழை தொடர்பான பேரழிவுகளால் ஏற்பட்ட சேதங்களைக் கருத்தில் கொண்டு ஜம்மு-காஷ்மீருக்கு நிவாரண தொகுப்பை அறிவிக்குமாறு மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி மத்திய அரசை வலியுறுத்... மேலும் பார்க்க

சொகுசுக் கப்பல் அனுபவம்: வெள்ள பாதிப்புகளை பார்வையிடும்போது பேசுவதா? சர்ச்சையில் அமைச்சர்கள்

பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடச் சென்ற அமைச்சர்கள், அப்போது, தங்களது சொகுசுக் கப்பல் பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.சுமார் 27 வின... மேலும் பார்க்க

வாக்குரிமைப் பேரணி: ராகுலுடன் இணைந்த அகிலேஷ் யாதவ்!

பிகாரில் சரண் மாவட்டத்தில் நடைபெறும் வாக்குரிமைப் பேரணியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் இணைந்தார். இதுதொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைர் கே.சி. வேணுகோபால்... மேலும் பார்க்க