செய்திகள் :

ஜாதவ்பூர் பல்கலை கலவரம்: அமைச்சர் வாகனம் மோதி காயமடைந்த மாணவர் மீது வழக்குப்பதிவு!

post image

கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழக கலவரத்தில் அமைச்சர் வாகனம் மோதி காயமடைந்த மாணவர் உள்பட பலர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்க கல்வி அமைச்சரான பிரத்யா பாசு கடந்த சனியன்று (மார்ச் 1) பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜாதவ்பூர் பல்கலைக்கு சென்றிருந்தார். 

அப்போது பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலை விரைவில் நடத்தக் கோரி, சிபிஐ(எம்) மாணவர் பிரிவான ’இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ)’ மற்றும் பிற இடதுசாரி மாணவர் அமைப்புகளின் உறுப்பினர்களால் போராட்டம் நடத்தப்பட்டது.

மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமைச்சர் பிரத்யா பாசு

கல்லூரியிலிருந்து அமைச்சர் திரும்புகையில் சில மாணவர்கள் அமைச்சரின் காரை மறித்துப் போராட்டம் நடத்தினர். அப்போது மாணவர்களுடன் அமைச்சருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரது காரை மாணவர்கள் சேதப்படுத்தியதாகவும் அவரை உடல் ரீதியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அமைச்சர் பாசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க | ரோஹித் சர்மா உடல் எடையைக் குறைக்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர் கருத்து!

அமைச்சரின் கார் பல்கலையிலிருந்து கிளம்பியபோது மாணவர்களின் மீது மோதியதாகவும், இதனால் சில மாணவர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திரனுஜ் ராய் எனப்படும் முதலாமாண்டு மாணவர் அமைச்சரின் கார் மோதியதில் காயமடைந்து கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரின் காரை மறித்து அவருக்கு காயம் ஏற்படுத்தி, அவரது உடைமைகளைத் திருடியதாகக் குறிப்பிட்டு இந்திரனுஜ் ராய் உள்பட பல மாணவர்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் மொத்தம் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

மேலும், அவர்கள் கல்லூரி வளாகத்தில் கலவரம் ஏற்படுத்தி பொதுச் சொத்திற்கு சேதம் உண்டாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க | காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: கைது செய்யப்பட்டவர் காதலனா?

அமைச்சர் பிரத்யா பாசு நாடகமாடுவதாகவும், அவர் வேண்டுமென்றே மாணவர்கள் மீது காரை ஏற்றிவிட்டு தற்போது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் ஜாதவ்பூர் பல்கலை மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர் அமைப்புகள் கொல்கத்தாவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சமூக ஊடக கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி: பயனாளருக்கு நோட்டீஸ் அனுப்பாமல் சமூக ஊடக கணக்குகள் முடக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. தகவல் தொழில... மேலும் பார்க்க

ஐஆா்சிடிசிக்கு ‘நவரத்னா’ அந்தஸ்து

புது தில்லி: இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆா்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆா்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத... மேலும் பார்க்க

சகோதரா் மகனை கட்சியில் இருந்தும் நீக்கினாா் மாயாவதி

லக்னௌ: தனது சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சித் தலைவா் மாயாவதி திங்கள்கிழமை அறிவித்தாா். முன்னதாக, ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து... மேலும் பார்க்க

நீதித் துறையில் பாா்வையற்றவா்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: நீதித் துறை பணிகளுக்கு பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தகுதியானவா்கள் அல்ல என கூறமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச நீதித் துறை பணிகளின் (ஆள்சோ்ப்பு மற்றும் பணி ந... மேலும் பார்க்க

ரோகித் சா்மாவின் தோற்றத்தை விமா்சித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் கருத்து: பாஜக கண்டனம்

புது தில்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சா்மாவின் உடல் தோற்றத்தை விமா்சித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் ஷமா முகமது கருத்து தெரிவித்த நிலையில், அது காங்கிரஸின் கருத்தல்ல என்று அக்கட்சி தெர... மேலும் பார்க்க

நிலுவைத்தொகை ரூ.1.36 லட்சம் கோடியைப் பெற மத்திய அரசு மீது சட்ட நடவடிக்கை: ஜாா்க்கண்ட் நிதியமைச்சா் தகவல்

ராஞ்சி: மத்திய அரசு தங்கள் மாநிலத்துக்கு தர வேண்டிய ரூ.1.36 லட்சம் கோடி நிலக்கரி நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜாா்க்கண்ட் மாநில நிதியமைச்சா் ராதாகிருஷ... மேலும் பார்க்க