செய்திகள் :

ஜார்க்கண்டில் பாஜக விரைவில் ஆட்சிக்கு வரும்: முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ்

post image

ஜார்க்கண்டில் பாஜக விரைவில் ஆட்சிக்கு வரும் என்று முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார்.

ஒடிசா ஆளுநராக பதவி வகித்து வந்த ரகுபர் தாஸ் கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி அந்த பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து அவர் தீவிர அரசியலுக்குத் திரும்பியுள்ளார். ராஞ்சியில் உள்ள பாஜகவின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் கட்சியில் இன்று மீண்டும் இணைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய அவர், 1980-ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக கட்சியின் உறுப்பினரானதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வேன். 2024 சட்டப்பேரவைத் தேர்தலில், நாங்கள் விரும்பிய முடிவுகளைப் பெறவில்லை. முடிவுகளால் நாம் சோர்ந்து போகக்கூடாது. விரைவில் ஆட்சிக்கு வருவோம்.

மது போதையில் அண்ணனைக் கொன்ற தம்பி கைது!

கூட்டணி அரசுக்கு ஜார்கண்ட் மக்கள் அதிகாரத்தை வழங்கியுள்ளனர். நாங்கள் அதனை மதிக்கிறோம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறோம். வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் அவகாசம் அளிப்போம். அரசு செய்யத் தவறினால் நாங்கள் வீதியில் இறங்கி போராடுவோம்'' என்றார்.

2024 ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்தது. 81 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாஜகவால் 21 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. அதேசமயம் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சி 56 இடங்களைக் கைப்பற்றி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது.

வயநாடு மறுவாழ்வு பணிகள்: கேரள அரசின் நிலுவை தொகையில் ரூ.120 கோடி தள்ளுபடி: உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் நடந்துவரும் மறுவாழ்வு பணிகளை கருத்தில் கொண்டு கேரள அரசின் ரூ.120 கோடி நிலுவை தொகையை தள்ளுபடி செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக கேரள உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

கோகல்புரி காவல் நிலையத்தில் தீ விபத்து

தில்லியில் உள்ள கோகல்புரி காவல் நிலையத்தின் 4-ஆவது மாடியில் உள்ள ஒரு அறையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் அலுவலக உபகரணங்கள் சேதமடைந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி க... மேலும் பார்க்க

பெங்களூரில் இன்று ராணுவ தின கண்காட்சி

பெங்களூரில் சனிக்கிழமை ராணுவ தின கண்காட்சி நடக்கவிருக்கிறது. இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை மேஜா் ஜெனரல் வி.டி.மேத்யூ, செய்தியாளா்களிடம் கூறியதாவது: நமது நாட்டுக்கு ராணுவ வீரா்கள் அளித்துள்ள உய... மேலும் பார்க்க

மாற்றமில்லாத வட்டி விகிதத்தில் வங்கிகள் கடன் வழங்குவது கட்டாயம்: ஆா்பிஐ

தவணை அடிப்படையிலான அனைத்து தனிநபா் கடன் பிரிவுகளிலும் மாற்றமில்லாத வட்டி விகிதத்தில் வாடிக்கையாளருக்கு வங்கிகள் கடன் வழங்குவது கட்டாயம் என ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை தெரிவித்தது. அவ்வப்போது ... மேலும் பார்க்க

திருப்பதி நெரிசலில் சிக்கி காயமடைந்த பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம்!

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்துக்கு திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.ஆந்திர மாநிலம் திருப்பதியில் திருமலை ஏழுமலையான் கோவிலில் ஜன. 10 வைகுண்ட ஏகாதசி ச... மேலும் பார்க்க

அவதூறு வழக்கில் ராகுலுக்கு புணே நீதிமன்றம் ஜாமீன்

சாவர்க்கர் குறித்த அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகு காந்திக்கு புணே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.முன்னதாக இந்த வழக்கு புணே சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க