புது அவதாரத்தில்;மிர்ச்சி சிவா; யுவன் இல்லாமல் முதல் ராம் படம்!
ஜார்க்கண்ட்: இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்று ஒருவர் சுட்டுக்கொலை!
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷத்பூரில் இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்று 35 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஜம்ஷத்பூரின் குருத்வாரா சாலையில் சந்தோஷ் சிங் (வயது 35) என்பவர் தனது வீட்டின் அருகில் நேற்று (ஜன.19) இரவு நின்றுக்கொண்டிருந்தார். அப்போது, இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை நோக்கி துப்பாகியால் சுட்டுள்ளனர். அதில் இருந்து தப்பித்து ஓடி சந்தோஷ் சிங் அருகிலுள்ள வீட்டினுள் தஞ்சம் அடைந்துள்ளார்.
இருப்பினும், தொடர்ந்து அந்த வாகனத்தில் அவரை விரட்டி சென்ற மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் சந்தோஷ் சிங் உடலில் மூன்று குண்டுகள் பாய்ந்து அவர் படுகாயமடைந்தார்.
இதையும் படிக்க: பிகாரில் கள்ளச் சாராயம் குடித்து 7 பேர் பலி!
பின்னர், அவரை உடனடியாக மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சம்பவம் நடந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி யார்? என்றெல்லம் இன்னும் தெரியாத நிலையில், முன்பகையின் காரணமாக இந்த கொலைச் சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக, சந்தோஷ் சிங் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் ஒரு கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.